கழுகுமலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு
கழுகுமலையில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் புதன்கிழமை தொடங்கிவைத்தனர்.
கழுகுமலையில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் புதன்கிழமை தொடங்கிவைத்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டம் (2017-18) மூலம் கழுகுமலை ஆறுமுக நகரில் ரூ.50 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் பணியை தொடங்கிவைத்தனர்.
மேலும், கழுகுமலை பேரூராட்சி குதிரைலாயர் தெருவில் ரூ.3 லட்சம், தியாகராஜர் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மோட்டார் அறை மற்றும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், அதிமுக மாவட்டச் செயலர் சி.த.செல்லப்பாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலர் ரமேஷ், அதிமுக நிர்வாகிகள் செண்பகமூர்த்தி, வேலுமணி, அன்புராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.