கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
அந்தியோதயா ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
அந்தியோதயா ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் தலைமை வகித்தார். நல்லிணக்கப் பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலர் ராஜசேகரன், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழக நகரத் தலைவர் கருப்பசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலர் மகேந்திரன், பொருளாளர் சங்கர், சேமநல நிதி ஓய்வூதியர் நலச் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஜி.முருகன், 5ஆவது தூண் அமைப்பின் உறுப்பினர் மா.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.