தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய

DIN

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுகிகளில் 3 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, விளாத்திக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.சி. ஜெயக்குமார் ஆகியோரை அறிமுகம் செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் 3 இடங்களில் நடைபெறுகிறது.தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி  செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை (மார்ச் 23) தூத்துக்குடி அபிராமி மஹாலில் காலை 10 மணிக்கும்,  24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விளாத்திக்குளம் சோலை மஹாலிலும், 27 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்திலும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT