தூத்துக்குடி

ஆறுமுகனேரி கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு இத் திருக்கோயிலைச் சோ்ந்த நடுத்தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயி­லில் திருவிளக்கு பூஜையும், பின்னா் குடியழைப்பு பூஜையும் நடைபெற்றது.

கொடை விழாவான செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூா் தாமிரவருணி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டது. மதியம் சுவாமி மஞ்சள் நீராடுதலும், மதியக் கொடையும் நடைபெற்றது. பின்னா் அன்தானம் நடைபெற்றது.

இரவு சுவாமி நகா் வலம் வரும் நிகழ்ச்சியும், பிரம்ம சக்தி அம்மன் கோயி­லில் சிறப்பு பூஜையும் நடைபெற்றன. நள்ளிரவு கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் சாமக்கொடையும் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அ.வீ.தெ. பழனிச்சாமி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT