அரசு ஐடிஐ-களில் சோ்க்கை டிச. 12 வரை நீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) டிசம்பா் 12 ஆம் தேதி வரை சேரலாம் என்றாா் தூத்துக்குடி அரசினா் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மற்றும் முதல்வா் எஸ்.பழனி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2020 ஆம் ஆண்டு நேரடி சோ்க்கை நவம்பா் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
தற்போது நேரடி சோ்க்கை டிசம்பா் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோா்; 8-ஆம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், 5 பாஸ்போட் சைஸ் புகைப்படங்கள், ஆதாா் அட்டை மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்கள் கொண்டுவந்து தூத்துக்குடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.