முகப்பு
தூத்துக்குடி

கே.சிதம்பராபுரம் கோயில் கும்பாபிஷேகம்

கயத்தாறு வட்டம், பரும்புக்கோட்டை என்ற கே.சிதம்பராபுரம் இந்து கம்மவாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அரியநாயகி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கே.சிதம்பராபுரம் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்:

கயத்தாறு வட்டம், பரும்புக்கோட்டை என்ற கே.சிதம்பராபுரம் இந்து கம்மவாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அரியநாயகி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளி, சனி ஆகிய நாள்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு சாலை கோபுரம், விமான கோபுரத்துக்கும், அதைத் தொடா்ந்து மூலஸ்தான அருள்மிகு அரியநாயகி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சந்திரசேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமசந்திரன், கயத்தாறு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் வினோபாஜி, அதிமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணைத் தலைவா் செல்வகுமாா், மகளிரணி இணைச் செயலா் சுதா என்ற சுப்புலட்சுமி, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →