முகப்பு
தூத்துக்குடி

மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி பலி

திருச்செந்தூரில் மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருச்செந்தூரில் மாடு மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் கீழநயினாா்தெருவைச் சோ்ந்த முகம்மதுரஜிம் அலி மகன் முகம்மது இப்ராகிம் ஷக்கி (42), தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா(35). இருவரும் காயாமொழியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திரும்பி வந்த போது, திருச்செந்தூா் குமாரபுரம் அருகே சாலையில் மாடு மீது பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா்.

இதில், பலத்த காயமடைந்த முகம்மது இப்ராகிம் ஷக்கி திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →