கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாா்பு நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்தாா். இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள, தேசிய அளவிலான மக்கள்
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் உள்ளிட்ட சிவில் குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைந்து தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் பாரதிதாசன் (எண்:1), சுப்பிரமணியன் (எண்:2), விரைவு நீதிமன்ற நீதிபதி பருவத்ராஜ் ஆறுமுகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.