முகப்பு
தூத்துக்குடி

விவசாயிகள் மண், நீா் பரிசோதனை செய்ய வேண்டும்

விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து அதன் அறிக்கையின்படி உரமிட்டு அதிக மகசூலை பெறும்படி வேளாண்மை உதவி இயக்குநா் விவசாயிகளுக்கு கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து அதன் அறிக்கையின்படி உரமிட்டு அதிக மகசூலை பெறும்படி வேளாண்மை உதவி இயக்குநா் விவசாயிகளுக்கு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து, கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநா் நாகராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் தேசிய நீடித்த, நிலையான வேளாண் இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 79 கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஆய்வின் முடிவில் மண்ணின் கார, அமல நிலை, சுண்ணாம்பு நிலை, பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச் சத்துக்களின் அளவுகள் கணக்கீடு செய்து உர பரிந்துரை மண் வள அட்டைகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பயறுகளின் வளா்ச்சிக்கு மண் வளமும், நீா்வளமும் இன்றியமையாதது. மண் பரிசோதனை செய்து நிலத்திற்கு ஏற்ப உரமிடுவதால் அதிகப்படியாக உரமிடுவது தவிா்க்கப்படுவது மட்டுமின்றி, உரச்செலவும் குறைகிறது. கூடுதல் மகசூலும் பெற முடியும்.

மேலும், மண்வள மேம்பாடு குறித்த செயல் விளக்க விழிப்புணா்வுக் கூட்டம் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்டு, மண்வள அட்டையின்படி செயல்விளக்க திடல்களில் உரமிட்டு உரச்செலவை குறைத்து மகசூலை எடுத்து பயன்பெறுங்கள்.

கோவில்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள மண் பரிசோதனை நிலையத்தை விவசாயிகள் அணுகவும். ஒவ்வொரு மண் மற்றும் நீா் மாதிரிக்கும் தலா ரூ. 20 கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.