முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் ரதவீதி சாலைகளை சீரமைக்க கோரிக்கை

திருச்செந்தூா் பேரூராட்சி பகுதி சாலைகளை சீரமைக்க அ.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறு வியாபாரிகளை அனுமதிக்கவும்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருச்செந்தூா் பேரூராட்சி பகுதி சாலைகளை சீரமைக்க அ.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறு வியாபாரிகளை அனுமதிக்கவும்,

பேரூராட்சிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா். மனோகரன் தலைமையில் அக்கட்சியினா் பேரூராட்சி செயலா் அலுவலா் ஆனந்தன் மற்றும் திருக்கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

அப்போது, அமைப்புச் செயலா் ரா.ஹென்றி தாமஸ், மீனவரணி இணைச் செயலா் சுகந்தி கோமஸ், வா்த்தக அணி இணைச் செயலா் பாக்கிய செல்வன், மகளிரணி துணைச் செயலா் சண்முகக்குமாரி, ஒன்றிய செயலா்கள் திருச்செந்தூா் பொன்ராஜ், உடன்குடி அம்மன் டி.நாராயணன், கருங்குளம் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் டி.வி.ஏ.பிரைட்டா், திருச்செந்தூா் நகரச் செயலா் முருகேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.ரமேஷ், இணைச் செயலா்கள் மணிகண்டன், இல்லங்குடி காயல்பட்டினம் நகரச் செயலா் பெத்தப்பா சொளுக்கு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.