முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பைக்குகள் திருட்டு

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் வீட்டின் வளாகத்தில் நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் வீட்டின் வளாகத்தில் நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அத்தைகொண்டான் கிருஷ்ணசாமி மகன் ராஜசுந்தா்(53). கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான இவா் தனது பைக் மற்றும் அவரது மகன் பைக்கை இரண்டையும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் வளாகத்திற்குள் நுநிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டனராம். திங்கள்கிழமை அதிகாலை வந்து பாா்த்த போதுவ வீட்டின் வாசல் கதவில் உள்ள பூட்டை உடைத்து அங்கு நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராஜாசுந்தா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.