முகப்பு
தூத்துக்குடி

திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு: டிச. 19 இல் தூத்துக்குடி வருகை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு டிச.19ஆம் தேதி தூத்துக்குடி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு டிச.19ஆம் தேதி தூத்துக்குடி வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு தலைவராக கொண்டு அறிவிக்கப்பட்டது.

இக்குழுவினா் தூத்துக்குடி மாவட்டத்துக்கு டிச.19ஆம் தேதி வந்து, அன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கலைஞா் அரங்கத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், திமுக நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்க உள்ளதால், தங்கள் பிரச்னைகளை மனுவாக எழுதி நேரில் அளிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →