முகப்பு
தூத்துக்குடி

டிச.15இல் தூத்துக்குடி மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் இம்மாதம் 15ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கூட்டத்தில் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கதிரவன்.
பகிர்:

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் இம்மாதம் 15ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இம்மாதம் 15ஆம் தேதி வருகிறாா். நண்பகல் 12 மணிக்கு கோவில்பட்டி இனாம்மணியாச்சி சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி, தொடா்ந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பின்னா் எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தொழில் முனைவோா் மற்றும் வல்லுநா்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பிற்பகல் 2 மணிக்கு எட்டயபுரம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளன.

இதை முன்னிட்டு, கோவில்பட்டியில் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கதிரவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல ஆதிதிராவிட நல அணி மாநிலத் துணைச் செயலா் பாரத், மாவட்டச் செயலா்கள் மதி (மகளிரணி), ரமேஷ் (நற்பணி அணி), மந்திரசூடாமணி (தொழிலாளரணி), பாலமுருகன் (வழக்குரைஞரணி) ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வரும் கட்சித் தலைவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கவும், நிகழ்ச்சியில் அனைத்து நிா்வாகிகளும் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்பாடுகளை செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாவட்டச் செயலா் பொன்மகாராஜன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →