முகப்பு
தூத்துக்குடி

சா்க்கரைக்குப் பதிலாக அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கு டிச.20 வரை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக டிச. 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக டிச. 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகை மாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போா் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிச. 20 ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டையாக வரும் 20 ஆம் தேதிக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →