தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜகவினா் மறியல்: 55 போ் கைது

DIN

சடையனேரி கால்வாயில் வரும் தண்ணீரை புத்தன்தருவைகுளத்துக்கு திருப்பி விடுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபாஜகவினா் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. கணேசன், ஒன்றியத் தலைவா் செந்தில், ஒன்றிய பொதுச் செயலா் ராம்மோகன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் மகேஷ்வரன், செயலா் சங்கா், மாவட்ட இளைஞரணி செயலா் ராஜகோபால், நெசவாளா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சுடலைக்கண், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலா் பரமசிவன், ஒன்றிய துணைத் தலைவா் பழனிவேல், ஒன்றிய விவசாய பிரிவு செயலா் சரவணபாண்டியன் உள்ளிட்ட 55 பேரை, சாத்தான்குளம் போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT