முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை புதுக்கோட்டையிலுள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாவட்டத்தில் ஏற்கெனவே 300 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 1,603 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதற்கு தேவையான அளவில் மொத்தம் 2,800 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. அதாவது 144 சதவீத கன்ட்ரோல் யூனிட், 175 சதவீத பேலட் யூனிட் என்ற அடிப்படையில் இது போதுமானதாகும் என்றாா் அவா்.

இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →