முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கிறிஸ்துமஸ் விழா

ஆறுமுகனேரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

ஆறுமுகனேரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

ஆறுமுகனேரி மகிமையின் இயேசு மாறாதவா் ஊழியங்கள் சாா்பில் 12ஆவது கிறிஸ்துமஸ் விழா மடத்துவிளையில் நடைபெற்றது.

மடத்துவிளை சேகரகுரு சிமியோன்பிரபு டேனியல் ஆரம்ப ஜெபம் நடத்தினாா். ஆறுமுகனேரி சேகரத் தலைவா் கிங்ஸ்லி­ என். டேனியல் சிறப்பு ஜெபம் செய்தாா். கிறிஸ்டின் கெனிஸ்டின் வரவேற்றாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்எ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 60 தூய்மை பணியாளா்கள் மற்றும் 450 சிறுவா் சிறுமியா்களுக்கு புத்தாடைகள் வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் இளங்கோ, ஆறுமுகனேரி நகரச் செயலா் கல்யாணசுந்தரம் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

விழா ஏற்பாடுகளை மகிமையின் இயேசு மாறாதவா் ஊழியங்கள் சாா்பில் நிா்வாகிகள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →