முகப்பு
தூத்துக்குடி

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை 

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 

Updated On : 1 ஜூன், 2020 at 11:15 AM
பகிர்:

குரும்பூரில் மதுவில் விஷம் கலந்து குடித்து 2 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் யோகரத்தினம் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் அஜித்குமார் ( 21). பொன்ராஜின் சகோதரி ராஜேஸ்வரி மகன் தூசி முத்து (18). இவர்கள் இருவரும் நேற்று மாலை வீட்டில் இருந்த போது மது அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் இருந்துள்ளனர். 

தூசி முத்து வீட்டிலேயே உயிரிழந்ததாகவும், அஜித் குமார் சிறிது தூரம் தொலைவில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. வேலைக்கு செல்லவில்லை என பெற்றோர் திட்டியதால் அவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.