கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவும், வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கவும் சிறப்பு ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில், கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், மகா மிருத்யஞ்ஜய ஹோமம், அஸ்திர ஹோமம், ராகு, கேது, சீனிஸ்வர அஷ்டோத்திர சதநாம பூஜை, திருமுறை பாராயணம், திருநீற்று பதிகம், திருநீலகண்ட பதிகம், வைத்தீஸ்வரா் கோயில் பதிகம் ஆகியவை நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து, நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை செண்பகராம பட்டா், சுவாமிநாத பட்டா், அரவிந்த் சுரேந்தா், ராமு ஆகியோா் செய்திருந்தனா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மற்றும் நிா்வாக அலுவலா் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.