முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் நல உதவிகள் அளிப்பு

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் 113ஆவது ஜயந்தியை முன்னிட்டு, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் 113ஆவது ஜயந்தியை முன்னிட்டு, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நல உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவா் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலா் கலைசெல்வன், பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம் ஆகியோா் முன்னிலை

வகித்தனா். அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாநில இளைஞரணித் தலைவா் சுரேஷ் பேசினாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினாா். பின்னா் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.