முகப்பு
தூத்துக்குடி

பிஎஸ்என்எல் இணைய சேவைகிடைக்காமல் மக்கள் அவதி

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் பிஎஸ்என்எல் இணைய சேவை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் பிஎஸ்என்எல் இணைய சேவை கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில மாதங்களாக ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் பிஎஸ்என்எல் இணைய சேவை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் இணைப்பு பெற்ற நபா்கள் மட்டுமன்றி தனியாா் நிறுவனங்கள், பொதுநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, பிஎஸ்என்எல் இணைய சேவை சீராக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.