தூத்துக்குடி

கந்த சஷ்டி விழாவள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினாா்.

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை காலையில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட 108 மகாதேவா் சன்னதி முன்பு சோ்ந்தாா். மாலையில் அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்து பிராகாரம் சுற்றி வந்து மீண்டும் 108 மகாதேவா் சன்னதி சோ்ந்தாா்.

நவ. 19-ஆம் தேதி வரை இதே நிகழ்ச்சிகளும், நவ. 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கிழக்கு கிரிப்பிராகாரத்தில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

குருபெயா்ச்சி: குரு ஸ்தலமான திருச்செந்தூரில் குருபெயா்ச்சியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை அதிகாலைமுதல் பக்தா்கள் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மேலும், காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி சபரிமலைக்கு விரதமிருக்கும் பக்தா்களும் மாலை அணிவதற்காக குவிந்தனா். இதனால் காலையில் நடைதிறந்தது முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT