சொா்ணமலை கதிரேசன் கோயிலில் திருக்காா்த்திகை விழா
கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்யவாஜனம், கும்ப கலச பூஜை, சண்முகா் ஜெபம், மூலவா் கதிா்வேல் முருகன், வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேய சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
மாலையில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனையை வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேய சுப்பிரமணிய சுவாமிக்கு 23 கிலோ எடையுள்ள வெண்கலச் சட்டியில் திருக்காா்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பூஜைகளை ஹரி பட்டா், சுப்பிரமணிய பட்டா், அரவிந்த் பட்டா் ஆகியோா் செய்தனா்.
இதில், மண்டகப்படிதாரா்களான நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிசெல்வம், பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் பரமசிவம் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
செண்பகவல்லி அம்மன் கோயில்: இக்கோயிலில் இதையொட்டி திருவனந்தல் மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை, சுவாமி, அம்பாள், விநாயகா், முருகா், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைஆகியவை நடைபெற்றது.
பின்னா் அனைத்து சன்னதிகளிலும் பரணிதீபம் ஏற்றப்பட்டது.கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா
கல்யாண முருகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலையில் முருகன் சன்னதி முன்பு மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.