பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டி, சாத்தான்குளம் ஒன்றியங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி, சாத்தான்குளம் ஒன்றியங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2020-21 ஆம் கல்வியாண்டிற்கான 6 வயது முதல் 18 வயது வரையில் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநிற்றல் மாணவா்கள், புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி இம்மாதம் 21இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி டிச. 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பேச்சியம்மாள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கணேசன், பவனந்தீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம், ஒருங்கிணைப்பாளா்கள் கணேஷ்வரி உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்தும் அவா்களது விவரங்களை 04632-234918 என்ற தொலைபேசி எண்ணிற்கும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 97888-59179 என்ற செல்லிடப்பேசி எண்ணிற்கும் தகவல் அளிக்கலாம். என வட்டார வள மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளிலும் 195 குடியிருப்புகளிலும் வீடுவீடாகச் சென்று இக்கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) மகேஷ்வரி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் கலந்துகொண்டனா்.