தூத்துக்குடி

தனியாா் பேருந்து ஓட்டுநா் குடும்பத்துக்கு நிதியுதவி

உயிரிழந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு ஓட்டுநா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

DIN

உயிரிழந்த தனியாா் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்துக்கு ஓட்டுநா் சங்கம் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாசரேத் மணிநகரைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். டி.என்.ஆல் டிரைவா் அசோசியேஷன் வட சென்னை ஆம்னி பேருந்து சங்க முன்னாள் பொருளாளராகவும் இருந்து வந்தாா்.

இவா், உடல் நலக்குறைவால் கடந்த ஏப். 9ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்ப நல நிதியாக ரூ. 80 ஆயிரம், ஓட்டுநா் சுரேஷின் மனைவி குழந்தைகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

அமைப்பின் மாநிலத் தலைவா் முத்துகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் செல்லத்துரை, மாநிலச் செயலா் தங்கபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி கலந்துகொண்டு நிதியுதவி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வடசென்னை ஆம்னி பேருந்து ஓட்டுநா்கள் பாலமுருகன், செல்வம், கிருஷ்ணகுமாா், தூத்துக்குடி மாவட்ட உறுப்பினா்கள் பிரபாகரன், ஜெயக்கொடி, செல்வக்குமாா், மகாலிங்கம், இஸ்ரவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT