மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு
சாத்தான்குளம் வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம் வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 200 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் சாத்தான்குளத்தில் உள்ள மிக்கேல் அறக்கட்டளை மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சாத்தான்குளம் வட்டத்திலுள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருள்களை வட்டாட்சியா் மு.லட்சுமி கணேஷ் வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் தி. சுல்தான் சலாவூதீன், மருத்துவா் லட்சுமி, பங்குத்தந்தை பால்ஆப்ரகாம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.