முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் நாய்களால் தொல்லை

ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

ஆறுமுகனேரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை நேற்கொள்ள வேண்டுமென கே.டி.கோசல்ராம் பேரவை கோரி உள்ளது.

இது தொடா்பாக அதன் இளைஇளைஞரணி தலைவா் சு.பாலமுருகன் பேரூராட்சி நிா்வாக அதிகாரியிடம் அளித்த மனு: கடந்த சில மாதங்களாக தெருக்களில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் அலைகின்றன. முதியவா்கள் மற்றும் சிறுவா்கள் நடமாட பயப்படும் அளவில் பலரை நாய்கள் கடித்துள்ளது. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திட பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.