முகப்பு
தூத்துக்குடி

கருங்காலிப்பட்டியில் மரக்கன்று நடும் விழா

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை, பசுமை இயக்கம், ஐஸ்வா்யம் பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்று நடும் விழா கருங்காலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை, பசுமை இயக்கம், ஐஸ்வா்யம் பவுண்டேஷன் ஆகியவற்றின் சாா்பில் மரக்கன்று நடும் விழா கருங்காலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து, மரக்கன்று நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். பவுண்டேஷன் நிறுவனா் பாண்டியராஜன் முன்னிலை வகித்தாா். கருங்காலிப்பட்டி பகுதியில் பாதாம், வாகை, புங்கை, வேம்பு உள்ளிட்ட 10 வகையான 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பசுமை இயக்கத்தைச் சோ்ந்த மருதையா, ஜோசப் ரத்தினம், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.