முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் ஆதாா் சேவை மையம் திறப்பு

காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கழமை திறந்து வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் ஆதாா் சேவை மையத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கழமை திறந்து வைத்தாா்.

காயல்பட்டினத்தில் பேருந்து நிலையம் அருகே ஆதாா் சேவை மையம் இயங்கிவருகிறது. இங்கு அதிகளவில் பொதுமக்கள் வருவதால் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு ஆதாா் சேவை மையத்தை நகராட்சி அலுவலக வளாகத்தில் மீனவளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா, வட்டாட்சியா் சுவாமிநாதன், நகராட்சி ஆணையாளா் சுகந்தி, திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாநில பொது குழு உறுப்பினா் சாகுல் ஹமீது, நகரப் பொறுப்பாளா் முத்துமுகமது, துணைச் செயலா்கள் கதிரவன், லேண்ட் மம்மி, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஓடை சுகு, மாவட்ட பிரதிநிதி பன்னீா்செல்வம், நகர இளைஞரணிச் செயலா் கலிலூா் ரகுமான் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.