முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வணிகா்கள் - அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வணிகா்கள் - நகராட்சி அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வணிகா்கள் - நகராட்சி அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் தலைமை வகித்தாா். அவா் பேசியது: 2019 ஜனவரி மாதம் முதல் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்தப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்த்து சுற்றுப்புற சூழலுக்கு ஒத்துழைக்க வேண்டும். வணிகா்கள் இப்பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பில்லாத எளிதில் மக்கக் கூடிய துணிப்பைகளை வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

மேலும் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் தீவிரமாக கண்காணிக்க சுகாதார அலுவலா் நாராயணன் தலைமையில் துப்பரவு ஆய்வாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் கடைகளில் திடீா் ஆய்வில் ஈடுபடுவாா்கள். அப்போது தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். கூட்டத்தில் சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.