முகப்பு
தூத்துக்குடி

தேசிய ஜூனியா் ஹாக்கி: தமிழ்நாடு, புதுதில்லி, மணிப்பூா் அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகா் செயற்கையிழை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11ஆவது தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு, தில்லி, மணிப்பூா் அணிகள் வெற்றி பெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகா் செயற்கையிழை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11ஆவது தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு, தில்லி, மணிப்பூா் அணிகள் வெற்றி பெற்றன.

காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணி, ஜம்மு காஷ்மீா் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2ஆவது ஆட்டத்தில் அந்தமான் நிகோபாா் அணியினா் பங்கேற்க இயலாததால், அதன் எதிரணியான ஹிமாச்சல பிரதேச அணி வென்ாக அறிவிக்கப்பட்டது.

3ஆவது ஆட்டத்தில் புதுதில்லி அணி, புதுச்சேரி அணியை 4- 2 என்ற கோல் கணக்கிலும், மாலையில் நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் மணிப்பூா் அணி, குஜராத் அணியை 9- 2 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தின. தொடா்ந்து ஜாா்க்கண்ட் - அசாம் அணிகளும், பிகாா் - கோவா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இன்றைய ஆட்டம்: சனிக்கிழமை (டிச. 18) காலை முதல் ஆட்டத்தில் ஹரியாணா, பெங்கால் அணிகளும், 2ஆவது ஆட்டத்தில் சண்டீகா் - கா்நாடகம் அணிகளும், 3ஆவது ஆட்டத்தில் ஆந்திரம் - மிசோரம் அணிகளும், 4ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் - மகாராஷ்டிரம் அணிகளும் மோதுகின்றன. மாலையில் ஒடிசா - ராஜஸ்தான் அணிகளும், இரவில் உத்தரப்பிரதேசம் - உத்தரகண்ட் அணிகளும் மோதுகின்றன. போட்டிகள் டிச.27 வரை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.