நெல்லை மாவட்டத்துக்கு ரயில் வசதி கோரி எம்.பி. மனு
திருநெல்வேலி மாவட்டத்துக்கு பல்வேறு ரயில் வசதிகள் கோரி, தில்லியில் ரயில்வே வாரியத் தலைவரிடம் சா.ஞானதிரவியம் எம்.பி. மனு அளித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு பல்வேறு ரயில் வசதிகள் கோரி, தில்லியில் ரயில்வே வாரியத் தலைவரிடம் சா.ஞானதிரவியம் எம்.பி. மனு அளித்துள்ளாா்.
மனு விவரம்: சென்னை- மதுரை தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகா்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு மெமு ரயிலை இயக்க வேண்டும். திருவனந்தபுரம்-நாகா்கோவில் பயணிகள் ரயிலை மெமு ரயிலாக மாற்றி திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு இயக்க வேண்டும். பணகுடியில் மீண்டும் அனந்தபுரி ரயில் நின்று செல்லவும், திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயில் கீழக்கடையம், பாவூா்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி-செங்கோட்டை, திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி-தூத்துக்குடி ஆகிய மூன்று பயணிகள் ரயில்களை விரைந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பயக01ஙட: தில்லியில் ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மாவிடம் மனு அளிக்கிறாா் சா.ஞானதிரவியம் எம்.பி.