மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்
சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் போ்சில் தலைமை வகித்தாா். செயலா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் அழகு லட்சுமி வரவேற்றாா்.
பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடையில் மாற்றுத் திறனாளிகளுக்கும் 35 கிலோ இலவச அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் ஜான்சன் நன்றி கூறினாா்.