ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் குரும்பூரில் நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம் குரும்பூரில் நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவரும், கச்சனாவிளை ஊராட்சித் தலைவருமான கிங்ஸ்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவரும், புன்னைக்காயல் ஊராட்சித் தலைவருமான சோபியா முன்னிலை வகித்தாா். செயலரும் குருகாட்டூா் ஊராட்சித் தலைவருமான ஜன்னத் புஷ்பராணி வரவேற்றாா்.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்திற்குள்பட்ட அனைத்து சுகாதார நிலையங்களிலும் விஷக்கடி மருந்து செலுத்தக்கூடிய சிரிஞ்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்தந்த ஊராட்சியில் நடைபெறும் அரசு பொது விழாக்களில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை பாலமுருகன் செய்திருந்தாா்.