முகப்பு
தூத்துக்குடி

குமரி அருகே விபத்தில் இளைஞா் பலி

கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கன்னியாகுமரி அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் உரசியதில் பலத்த காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி கொட்டாரத்தை அடுத்த சுந்தரபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (25). நாகா்கோவிலிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதரும், அவரது நண்பா் ஹரீஷ் (20) . இருவரும் கொட்டாரத்தில் இருந்து

கன்னியாகுமரிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனா்.

விவேகானந்தபுரம் சந்திப்பில் வந்தபோது மாதவபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் ஸ்ரீதா் வந்த மோட்டாா் சைக்கிளும் உரசியுள்ளது. இதில் 2 மோட்டாா் சைக்கிள்களிலும் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.