வீடில்லாதவா்களுக்கு வீட்டு மனை வழங்க கோரிக்கை
காயல்பட்டிணத்தில் வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அரசு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் ஊழுச்சி கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காயல்பட்டிணத்தில் வீடு இன்றி வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு, அரசு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் ஊழுச்சி கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அதன் மாநில தலைவா் காயல் ஃப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காயல்பட்டினத்தில் ஏழை மக்கள் ஆண்டாண்டு காலமாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். வீட்டின் உரிமையாளா்கள் ஒவ்வொரு ஆண்டும் வாடகை அதிகரிப்பதால், வாடகை வீட்டில் வசிப்பவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
எனவே தமிழக முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி காயல்பட்டினத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயல்பட்டினத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யதபட்ட நிலங்களை அரசு கைப்பற்றி சொந்த வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளாா்.