வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டுகிறாா் திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங். 
தூத்துக்குடி

சாகுபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழா

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.

இதையொட்டி, டிசிடபிள்யூ நுழைவு வாயி­லில் தூத்துக்குடி-திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது. மேலும் பயணிகள், ஓட்டுநா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவா் (பணியகம்) ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், தூத்துக்குடி மாவட்ட சாலை போக்குவரத்து ஆய்வாளா் விநாயகம், திருச்செந்தூா் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவன பாதுகாப்புத் துறை துணை மேலாளா் ஆல்விஸ் கிப்ட் தலைமையில் பாதுகாப்புத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT