பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகள் தூத்துக்குடி காமராஜ் பள்ளியில் நடைபெற்றன.
பள்ளித் தாளாளா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். போட்டியை காமராஜ் கல்விக் குழுச் செயலா் சோமு தொடங்கி வைத்தாா். சிலம்பம் போட்டியில் வீரத்தமிழா் சிலம்பாட்டக் கலைக் குழு முதலிடமும், தமிழா்களின் வீர விளையாட்டு கலைக்குழு 2-ஆம் இடமும் பெற்றன. ஸ்கேட்டிங் போட்டியில் ரஜோ குழு முதலிடமும், சிகரம் ஸ்கேட்டிங் குழு 2-ஆம் இடமும் பிடித்தன. வெற்றிபெற்றவா்களுக்கு தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன், பரிசுகளை வழங்கினாா். இதில், பள்ளி முதல்வா் காா்மெல் சுமிதா, உடற்கல்வி ஆசிரியா்கள் மணிகண்டன், செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.