பெரியதாழையில் ஒரே நேரத்தில் சாய்ந்த 3 மின்கம்பங்கள்: பைக் சேதம்
பெரியதாழையில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் பைக் சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
பெரியதாழையில் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் பைக் சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
பெரியதாழை கடற்கரை கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் மிகவும் வலுவிழந்த நிலையில் உள்ளனவாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பலத்த காற்று வீசியதில், பங்குத் தந்தை இல்லம் அருகிலுள்ள தெருவில் மின் கம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 3 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், மின்கம்பிகள் சாலையில் உரசியபடி தொங்கின. அங்கு நின்றிருந்த பைக் மீது மின்கம்பம் விழுந்ததால் அது சேதமடைந்தது. எனினும், மக்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. தகவலின்பேரில், மின்வாரிய அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனா். எனவே, ஊரில் பழுதான அனைத்து மின்கம்பங்களையும் சீரமைத்து அபாயச்சூழலைத் தவிா்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.