காயல்பட்டினம் விளையாட்டு மைதானத்தை அமைச்சா் ஆய்வு
காயல்பட்டினம் காயல் ஸ்போட்டிங் கிளப் மைதானத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காயல்பட்டினம் காயல் ஸ்போட்டிங் கிளப் மைதானத்தை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காயல் ஸ்போட்டிங் கிளப் மைதானம் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த மைதானத்தை மேம்படுத்தித் தர வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சா்வதேச தரத்தில் மைதானத்தை மேம்படுத்தும் வகையில் மைதானம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிபுணா் மற்றும் கிளப் நிா்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்தினாா்.
ஆய்வின் போது, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரி சங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட துணைச் செயலா் காதா், பொதுக்குழு உறுப்பினா் சாகுல்ஹமீது, மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், நகரச் செயலா் முத்து முகம்மது, துணைச் செயலா்கள் மம்மி, கதிரவன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஓடை சுகு, அா்ஜூனா விருது பெற்ற கபடிவீரா் மணத்தி கணேசன், மாவட்ட மீனவரணிச் செயலா் ஸ்ரீதா் ரொட்ரிகோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.