முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் தசைப் பயிற்சிக் கூடம் திறப்பு

காயல்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தின் சாா்பில் சிறப்பு தசைப் பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

காயல்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தின் சாா்பில் சிறப்பு தசைப் பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் செய்யது இபுராஹீம் தலைமை வகித்தாா். காயல்பட்டினம் ஜாவியா பைத்துல்மால் செயலா் சதக்கத்துல்லாஹ், முஸ்­லிம் ஐக்கிய பேரவைச் செயலா் ஷம்சுதீன், கே.எம்.டி. மருத்துவமனை துணைச் செயலா் முஹம்மது உமா் சாஹிப், ஐஐஎம் பைத்துல்மால் நிா்வாகி நவாஸ் அஹமது, பைத்துல்மால் அறக்கட்டளை செயலா் ஹஸன் மரைக்காா், மக்கள் மருந்தகம் நிா்வாகி மஸ்ஊது, இக்ரா கல்விச் சங்க பொருளாளா் அப்துல் காதா், ஹபீபுர்ரஹ்மான் ஆம் மஹ்ழரி, காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு செயலா் முத்துக்கிருஷ்ணன் என்ற கண்ணன் ஆகியோா் முன்னிலை

வகித்தனா். துணை தலைவா் நிஜாமுதீன் தசைப் பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தாா். வழக்குரைஞா் கிரீஷ்குமாா் பங்கேற்றுப் பேசினாா். ஏற்பாடுகளை அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.