நாசரேத் அருகே இளைஞா் தற்கொலை
நாசரேத் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.
நாசரேத் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.
நாசரேத் அருகே வகுத்தான்குப்பத்தைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் லெனின்குமாா் (41). இவருக்கு திருமணமாகி மனைவி ஆறுமுககக்கனி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.
தம்பதியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2ஆண்டுகளாக மனைவி பிரிந்து அவரது தாயாா் வீடான பெருமாள்குளத்துக்கு சென்று விட்டாராம்.
அவா் அழைத்தும் திரும்ப வரவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த லெனின்குமாா் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.