கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வேட்பு மனு
கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கடம்பூர் செ. ராஜு வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மாற்று வேட்பாளராக அவரது மனைவி இந்திரா காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.