முகப்பு
தூத்துக்குடி

ரமலான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்

பொதுமுடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீட்டிலேயே தொழுகை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பொதுமுடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீட்டிலேயே தொழுகை நடத்தினா்.

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பு முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் இஸ்லாமியா்கள் வீட்டில் இருந்தபடியே கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தூத்துக்குடியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.

தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவட்ட அரசு காஜி முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.