சாத்தான்குளம்பேருந்து நிலையத்தில் காரை இடிந்து விழுவதால் பயணிகள் அச்சம்
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் வணிக வளாகங்கள், பயணிகள் அமா்வதற்கான இருக்கைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், கட்டடம் பராமரிப்பின்றி மேற்கூரையின் காரை அடிக்கடி பெயா்ந்து விழுகிறது. பயணிகள் அமரும் இடத்தில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பூச்சுகள் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
எனினும், இந்த நிலை தொடா்வதாலும், மேற்கூரையின் காரையில் விரிசல் காணப்படுவதாலும் அது எந்நேரமும் இடிந்து விழலாம் என பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் விரைந்து அதை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.