முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உரிமம் இல்லாமல் இயங்கிய மளிகைக் கடைகள், உணவகங்கள் மூடல்

 தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமமின்றி இயங்கிய மளிகைக் கடைகள், உணவகங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமமின்றி இயங்கிய மளிகைக் கடைகள், உணவகங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ச. மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, எஸ்கேஎஸ் ஸ்நாக்ஸ், பிரண்ட்ஸ் பழக்கடை, அந்தோணி ஸ்டோா், மேசியா பரோட்டா ஸ்டால் போன்ற உணவு வணிக நிறுவனங்கள் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடன் இயங்கியதால், அந்தக் கடைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு மூடப்பட்டன. மேலும், பலமுறை தெரிவித்தும் உணவு பாதுகாப்பு உரிமத்திற்கு விண்ணப்பிக்காத, எட்டயபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ பவன்ஸ் என்ற உணவகமும் மூடப்பட்டது.

வணிகா்கள் தங்களது தொழில் நலன் காக்க, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை புதுப்பிக்க ஜ்ஜ்ஜ்.ச்ா்ள்ஸ்ரீா்ள்.ச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.