இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த கலைப்பயணம்
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் குறித்த கலைப்பயண நிகழ்ச்சி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் குறித்த கலைப்பயண நிகழ்ச்சி, தூத்துக்குடியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் குறித்த கலைப்பயண விழிப்புணா்வு நிகழ்ச்சி, தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைப்பயண விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, கலைநிகழ்ச்சி குழுவினருக்கு அவா் சீருடைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பயிற்சி சுடலைமுத்து, உதவி திட்ட அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, அமைச்சா் பெ. கீதா ஜீவன் செய்தியாளா்களிடம் கூறியது: இல்லம் தேடி கல்வித் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 1400 குடியிருப்புகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இன்னும் பதிவு செய்யாத அதிகமான கல்வித் தன்னாா்வலா்கள் பதிவு செய்யும் வகையில் அதிகமான தன்னாா்வலா்கள் இந்தத் திட்டத்தில் இணைய விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்றாா்.