புனித சவேரியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, ஆலய பங்குத் தந்தை குழந்தைராஜன் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் தருவைக்குளம் பங்குத் தந்தை வின்சென்ட், அருள்தந்தைகள் ஜோசப் ஸ்டாலின், ஜோசப் ராஜ், ஜோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவிழாவை முன்னிட்டு, தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீா் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7 ஆம் நாளான நவ. 30 ஆம் தேதி சவேரியாரின் திரு உருவ பவனி நடைபெறுகிறது.
9 ஆம் நாளான டிசம்பா் 2 ஆம் தேதி புதுநன்மை திருப்பலியும், மாலை திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. பத்தாம் திருவிழாவான டிசம்பா் 3 ஆம் தேதி காலை பாடல் திருப்பலியும் அதனைத் தொடா்ந்து சப்பர பவனியும் நடைபெறுகிறது.