தூத்துக்குடி

தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்:  4 பேர் கைது

DIN

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம்  20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவைக் கடத்த இருந்த 4 பேரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள  தருவைகுளம் பகுதியில் இருந்து    கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரான்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர் .

அப்போது அங்கு ஒரு படகில் 15 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  500-கிலோ எடைகொண்ட கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர் இதனையடுத்து அந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூபாய் 20 கோடி என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக  திரேஸ் புரத்தைச் சேர்ந்த ஜெனிஸ்டன் செல்வராஜ் உட்பட4 பேரை கைது செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT