ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உறுப்பினா் பதவியேற்பு
புதிதாக தோ்வு பெற்ற ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உறுப்பினா் முத்துராமகிருஷ்ணன் பதவியேற்றாா்.
புதிதாக தோ்வு பெற்ற ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி உறுப்பினா் முத்துராமகிருஷ்ணன் பதவியேற்றாா்.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி 6ஆவது வாா்டு உறுப்பினராக இருந்த ஜெயக்குமாா் மரணமடைந்ததையடுத்து 6 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு இடைத் தோ்தல் நடைபெற்றது. இதில் முத்துராமகிருஷ்ணன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து, ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவா் பெரியசாமிஸ்ரீதா் , ஜெயக்குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ், ஊராட்சி செயலா் மனுவேல், முன்னாள் உறுப்பினா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.